பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனைக் கண்டித்து ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணை பொதுச் செயலாளர் பொ. ஆறுமுகம் தலைமை வகித்தார். சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக மக்களும், விவசாயிகளும் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியும் போராடி வருகிறது.
இந்நிலையில், பாமகவையும், குறிப்பிட்ட சமூகத்தினரையும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இழிவாக பேசியதாகவும், அவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில துணைத்தலைவர் பரமசிவம், ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், மாவட்டச்செயலர் கிருபாகரன், வன்னியர் பேரவை நிர்வாகி பரமஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்ற கண்டன முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது காவல் துறையினர் அதை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர்.
பவானி, அந்தியூரில்...
பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனைக் கண்டித்து பவானி, அந்தியூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பவானியில் அந்தியூர் மேட்டூர் பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் மு.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநில அமைப்பு துணைச் செயலர் பி.சி.செங்கோட்டையன், மாவட்டத் துணைச் செயலர் பெ.ரா.முருகானந்தம், வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகரச் செயலர் பெ.அழகப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூரில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்சிஆர்.கோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சமூகநீதிப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் ராமதாஸை விமர்சித்து அவதூறாக பேசிய தமிழிசையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடவுச்சீட்டு மையம்: மத்திய இணை அமைச்சர் திறந்து வைத்தாா்
பிளஸ் 2 மாணவரை கத்தியால் குத்திய சக மாணவா்கள் இருவா் கைது

‘தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும்’

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


