தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மலைவாழ் இளைஞர் சங்க மாநிலக் குழுக் கூட்டம்

தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கம் (டிஒய்எப்ஐ) சார்பில் மாநிலக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:46 am

DIN

தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கம் (டிஒய்எப்ஐ) சார்பில் மாநிலக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோட்டில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சடையலிங்கம் தலைமை வகித்தார். 
மாநில செயலாளர் என்.பிரவீன்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் பாலா, மாவட்ட செயலாளர்கள் கோவை கனகராஜ், நாமக்கல் கோவிந்தராஜ், ஈரோடு சகாதேவன், மாநில குழு நிர்வாகிகள் பார்திபன், விக்னேஷ், வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், ஆந்திரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பழங்குடி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக பழங்குடி மக்கள் தாகுதல்கள் நடைபெற்று வருகிறது. இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். தமிழக பழங்குடி இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். 
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 7-ஆம் தேதி சேலத்தில் மண்டல அளவில் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.