
அகில இந்திய அஞ்சலக மேற்பார்வையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் கோட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பொதுச் செயலாளர் காளிமுத்து தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். நிறுவனர் கன்னியப்பன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்தில், கோட்டம் வாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அஞ்சல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், கேடர் சீரமைப்பை செயல்படுத்தி, பதவி உயர்வு வழங்குதல், மேற்பார்வையாளர்களுக்கு உயர் ஊதியம் வழங்குதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





