ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஈரோட்டில் கல்விக் கண்காட்சி

ஈரோட்டில் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில், கல்விக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

ஈரோட்டில் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில், கல்விக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 குமாரபாளையம் ஸ்ரீ ரெங்கசாமி கல்வி அறக்கட்டளை சார்பில், ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள மல்லிகை அரங்கத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியின் தொடக்க விழாவுக்கு,  குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், தலைவர் ஏ.கே.நடேசன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க அமைச்சரவைச் செயலாளர் டி.இளங்கோவன், வேளாளர் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்காட்சியைச் தொடக்கிவைத்தார். முன்னதாக, எக்ஸல் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் மதன் கார்த்திக் வரவேற்றார். ஸ்ரீ ரெங்கசாமி அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அதிகாரி கதிரேசன் நன்றி கூறினார்.   
 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் பார்வதி நடேசன், ஒருங்கிணைப்பாளர்கள், குமாரபாளையம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 இதுகுறித்து, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஏ.கே.நடேசன் கூறுகையில், இந்த கல்விக் கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட முன்னோடி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கல்விக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் பெற்றோர், மாணவ, மாணவிகள் 
பயன்பெறும் வகையில் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஈரோடு ரயில் நிலையம், திண்டல் ஆகிய இடங்களில் இருந்து இலவச  பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.