கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் மாத சிவராத்திரி வழிபாட்டுக் குழு சார்பில், ருத்ராபிஷேக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பூஜையில் 11 ருத்ரர்களைக் கலசமாக வைத்து அலங்கரித்து மந்திரங்கள் ஓதி பூஜைகள் தொடங்கின. இந்த பூஜையில் கொடுமுடி ஆதீனம், சிவாச்சாரியர் பிரபு கலந்துகொண்டு 11 ருத்ரர்களுக்கு முன்பு யாகம் அமைத்து 108 ஹோம திவ்யங்களான இடம்பொறிக்காய், வலம்பொறிக்காய், நெல் பொறி, அவில், வெற்றிவேல் விலாங்குச்சி, ஏலக்காய், ஜாதிக்காய், திராட்சை, முந்திரி, ஒன்பது நவதானியங்கள், ஆப்பிள், மாதுளை முத்துக்கள், இளநீர், தேங்காய், நெய், மா, பழா, மர வேர்கள், மர பட்டைகள் என 108 திவ்யங்களை பிரபு குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாக குண்டத்தில் போட்டு, மந்திரங்கள் ஓத அபிஷேக யாக பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். ருத்ர பூஜை குறித்து சிவாச்சாரியார் பிரபு கூறுகையில், உலக மக்களின் நன்மை கருதியும், மழை பெய்யவும்,விவசாயம் செழிக்கவும் வேண்டி இப்பூஜை நடைபெற்றதாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இபிஎஸ்ஸின் பிரசாரம் ஒத்திவைப்பு! பிரதமருடன் இன்று சாலை வலம்!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

கவனம் ஈர்க்கும் பூ பாடல்!

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

