
சித்தோடு அருகே உள்ள எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு, கவின் புனைவியல் சார்பில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஜவுளித் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கருத்தரங்கம், கல்லூரிகளுக்கு இடையிலான படைப்பாற்றலுக்கான போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளுக்கு, பாரதிதாசன் கல்வி நிறுவனத் தலைவர் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் எஸ்.அருள்ராஜ் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். கல்லூரிப் பொருளாளர் வி.ஆர்.முருகன், இணைச் செயலர்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறைத் தலைவர் ஆர்.கீதாதேவி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக திருப்பூர் சிக்கன்னா கல்லூரியின் ஆடை வடிவமைப்பு, கவின் புனைவியல் துறைப் பேராசிரியர் எஸ்.கற்பகம் சின்னம்மாள் பங்கேற்று, தற்போதைய ஆடை வடிவமைப்புத் துறையின் வளர்ச்சி, நவீனம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், 10 க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள், 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். துணைப் பேராசிரியர்கள் சி.திவ்யா, எஸ்.பி.மைதிலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






