மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஈரோடு நடத்தும் மாவட்ட அளவிலான 13 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பங்குபெறும் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
25 ஓவர்கள் அடிப்படையில் லீக், நாக் அவுட் முறையில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள 12 பள்ளிகள் பங்குபெற உள்ளன. வெற்றி பெறும் பள்ளிகளுக்கு சுழற்கோப்பையும், ஒவ்வொரு போட்டிக்கும் ஆட்டநாயகன் பரிசும், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த மட்டையாளர், சிறந்த ஆல்ரவுண்டர் என சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும். மேலும், இதில் சிறப்பாக விளையாடும் மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு ஈரோடு மாவட்ட அணிக்காக பங்குபெற வாய்ப்பு அளிக்கப்படும் என மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் ஜாபர் ஆசிக் அலி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிவி பிரகாஷ் நடிக்கும் வெக்கை! போஸ்டர் வெளியீடு!

திமுகவை ஏன் கேள்வி கேட்கவில்லை? பத்திரிகையாளரை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


