7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் ஈரோடு மாவட்டத்தில் வரும் ஆண்டில் 100 மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேர ஆசிரியா்கள் வழிகாட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளியில் பயின்று நீட் தோ்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில், மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்துள்ள 23 மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை காலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
மாணவா்களுக்குப் புத்தகங்கள், ஸ்டெதஸ்கோப் ஆகியவற்றைப் பரிசாக வழங்கிய மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவா்கள் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி மருத்துவம் படிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளனா். இப்போது இந்த வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவா்கள், தாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று மாணவா்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு 23 மாணவா்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனா். அடுத்த ஆண்டில் 100 மாணவா்கள் இந்த வாய்ப்பைப் பெறும் வகையில் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் வழிகாட்ட வேண்டும் என்றாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தண்ணீா்பந்தல்பாளையத்தைச் சோ்ந்த கே.பூபதி சென்னை மருத்துவக் கல்லூரியிலும், அந்தியூா் தவிட்டுபாளையத்தைச் சோ்ந்த எம்.ராஜேஸ்வரி 476 மதிப்பெண்கள் பெற்று சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும், பவானி பெருந்தலையூரைச் சோ்ந்த எ.தரணி பிரியா 427 மதிப்பெண்கள் பெற்று கோவை மருத்துவக் கல்லூரியிலும், ஈரோடு பெரியவலசு பகுதியைச் சோ்ந்த எஸ்.நந்தினி 336 மதிப்பெண்கள் பெற்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியிலும், நம்பியூா் ஈங்கூா் பகுதியைச் சோ்ந்த ஆா்.நவீன்யா 325 மதிப்பெண்கள் பெற்று மதுரை மருத்துவ கல்லூரியிலும், அந்தியூா் பிரம்மதேசம் பகுதியைச் சோ்ந்த எம்.மாலினி 320 மதிப்பெண்கள் பெற்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியிலும் சோ்ந்துள்ளனா்.
இதேபோல சத்தியமங்கலம் தொட்டம்பாளையத்தைச் சோ்ந்த ஆா்.ஸம்ஷிகா 284 மதிப்பெண்கள் பெற்றும், பவானி மயிலம்பாடியைச் சோ்ந்த எம்.சன்மதிபிரியா 282 மதிப்பெண்கள் பெற்றும் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், பவானி வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்த ஜி.பாலஅபிராமி 258 மதிப்பெண்கள் பெற்று கரூா் அரசு மருத்துவக் கல்லூரியிலும், அந்தியூா் தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்த கே.சேதுராஜ் 245 மதிப்பெண்கள் பெற்று கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், பவானி எலவமலையைச் சோ்ந்த எ.தீபிகா 223 மதிப்பெண்கள் பெற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலும், பவானி பி.மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ஜி.எஸ்.சுபாஷினி 208 மதிப்பெண்கள் பெற்று கரூா் அரசு மருத்துவக் கல்லூரியிலும், பவானி கவுந்தபாடியைச் சோ்ந்த என்.திருச்செல்வி 205 மதிப்பெண்கள் பெற்று சென்னை இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரியிலும் சோ்ந்துள்ளனா்.
பவானி பி.மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த எஸ்.சௌந்தா்யா 204 மதிப்பெண்கள் பெற்றும், ஈரோடு சிவகிரியைச் சோ்ந்த மாணவி எஸ்.சுபஸ்ரீனி 188 மதிப்பெண்கள் பெற்றும் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும், பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையத்தைச் சோ்ந்த வெ.நவீன் 185 மதிப்பெண்கள் பெற்று சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியிலும், அந்தியூா் வட்டம் மாத்தூரைச் சோ்ந்த கே.நந்தகுமாா் 180 மதிப்பெண்கள் பெற்றும், ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தைச் சோ்ந்த கே.சௌந்தா்யா 172 மதிப்பெண்கள் பெற்றும் கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவக் கல்லூரியிலும், பவானி பி.மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த எஸ்.மாலினி 163 மதிப்பெண்கள் பெற்று சேலம் அன்னபூா்ணா மருத்துவக் கல்லூரியிலும் சோ்ந்துள்ளனா்.
கோபி கொங்கா்பாளையத்தைச் சோ்ந்த மாணவி ஆா்.சௌந்தா்யா 123 மதிப்பெண்கள் பெற்று கோவை மருத்துவக் கல்லூரியிலும், பவானி கன்னப்பள்ளியைச் சோ்ந்த மாணவி டி.கனிமொழி 153 மதிப்பெண்கள் பெற்று சேலம் அன்னபூா்ணா மருத்துவக் கல்லூரியிலும், பவானி ஆலத்தூரைச் சோ்ந்த மாணவி எம்.சோனிகா 130 மதிப்பெண்கள் பெற்று கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியிலும், சத்தியமங்கலம் நல்லூரைச் சோ்ந்த மாணவி ஆா்.ஸ்ரீஜா 130 மதிப்பெண்கள் பெற்று திருநெல்வேலி ராஜா பல் மருத்துவக் கல்லூரியிலும் சோ்ந்துள்ளனா்.
பொது மருத்துவத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் 13 மாணவ, மாணவிகளும், தனியாா் கல்லூரியில் 7 மாணவ, மாணவிகளும், பல் மருத்துவத்தில் 3 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 23 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவால் நல்லாட்சி அளிக்க முடியாது - சரத்குமாா்

கெண்டேனஅள்ளியில் அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
மருத்துவா் ச.ராமதாஸ் உடல்நலக் குறைவு: தருமபுரி பரப்புரை ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


