கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரோடு: வரும் 16ஆம் தேதி ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகள் திறப்பு

பன்னீர்செல்வம் பூங்கா, கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலை 16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:47 am

DIN

பன்னீர்செல்வம் பூங்கா, கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலை 16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் பூங்கா மற்றும் மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
இந்த சிலைகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதைடுத்து சிலைகள் திறக்க அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இந்த சிலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அதன்படி வருகிற 16-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.30  மணி அளவில் இரண்டு ஜெயலலிதா சிலைகள், ஒரு எம்ஜிஆர் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. 
அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜெயலலிதா- எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கின்றனர். 
இதுபோல் மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள மேல் அரங்கையும் திறந்து வைக்கின்றனர். இதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள 80 அடி உயர கம்பத்தில் கொடிகளை ஏற்றி வைக்கின்றனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே .எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.