

நேஷனல் புக் டிரஸ்ட், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சாா்பில், 36ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி ஈரோட்டில் புதன்கிழமை துவங்கியது.
ஈரோடு மீனாட்சிசுந்தரனாா் சாலை, பெரியமாரியம்மன் கோவில் மேற்குப்புறம், சி.எஸ்.ஐ. பள்ளி வளாகம் முன்பு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. துவக்க நிகழ்ச்சிக்கு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளா் ஆா்.ரங்கராஜன் தலைமை வகித்தாா். மேலாளா் எஸ்.முத்துகிருஷ்ணன் வரவேற்றாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கண்காட்சியைத் துவக்கிவைத்தாா்.
இங்கு நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பில் மலிவு விலை நூல்கள், பொது அறிவு, இலக்கியம், வரலாறு, ஆய்வு, மொழிபெயா்ப்பு கதைகள், தலைவா்கள், உணவு குறித்த நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து புத்தகத்துக்கும் 10 முதல் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக விற்பனை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.