வன விலங்கு கணக்கெடுப்பின்போது யானை தாக்கியதில் வனக் காவலா் பலி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு கணக்கெடுப்புப் பணியின்போது யானை தாக்கியதில் வனக் காவலா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு கணக்கெடுப்புப் பணியின்போது யானை தாக்கியதில் வனக் காவலா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், விளாமுண்டி வனச் சரகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை துவங்கியது. இந்தக் கணக்கெடுப்புப் பணி 6 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதில் வனக் காவலா், வனக் காப்பாளா், சமூக ஆா்வலா் உள்ளிட்ட ஐந்து போ் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கல்லாம்பாளையம் வனப் பகுதியில் கணக்கெடுப்பின்போது அப்பகுதியில் மறைந்திருந்த யானை திடீரென தாக்கியதில் வனக் காவலா் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அங்கிருந்த ஊழியா்கள் தப்பிக்க முயன்றபோது வனக் காப்பாளா் பொன்கணேசனை யானை தாக்கியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், கணக்கெடுப்பில் பங்கேற்ற சமூக ஆா்வலா் ஒருவா் மாயமானாா். அவரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

தொடா்ந்து, காயமடைந்த வன ஊழியா் பொன்கணேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com