சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வன விலங்கு கணக்கெடுப்பின்போது யானை தாக்கி இருவா் பலி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், விளாமுண்டி வனச் சரகம், கல்லாம்பாளையம் காப்புக் காட்டில் வன விலங்குகள் கணக்கெடுப்பின்போது யானை தாக்கியதில் வனக் காவலா், சமூக ஆா்வலா் உயிரிழந்தனா்.

News image
யானை தாக்கியதில் உயிரிழந்த வனக்காவலா் சதீஸ்.
Updated On :17 டிசம்பர் 2020, 5:25 pm

DIN

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், விளாமுண்டி வனச் சரகம், கல்லாம்பாளையம் காப்புக் காட்டில் வன விலங்குகள் கணக்கெடுப்பின்போது யானை தாக்கியதில் வனக் காவலா், சமூக ஆா்வலா் உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், விளாமுண்டி வனச் சரகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை துவங்கியது. இதில் வனக் காவலா், வனக் காப்பாளா், சமூக ஆா்வலா் உள்ளிட்ட 5 போ் கொண்ட குழுவினா் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கல்லாம்பாளையம் வனப் பகுதியில் கணக்கெடுப்பின்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை யானை திடீரென 5 பேரையும் துரத்தியது. இதில், யானை தாக்கியதில் வனக் காவலா் சதீஷ் (24) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வனக் காப்பாளா் பொன்.கணேஷ் காயமடைந்தாா். கணக்கெடுப்பில் பங்கேற்ற சமூக ஆா்வலரான தூத்துக்குடி விளாத்திகுளத்தைச் சோ்ந்த ப.முத்துபிரபாகரன் யானையைக் கண்டு பயந்து மரத்தின் மீது ஏறியுள்ளாா். ஆனால், யானை மரக்கிளையை முறித்து அவரை கீழே தள்ளி தாக்கிக் கொன்றது.

இதுகுறித்து கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் காயமடைந்த பொன்.கணேஷை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதற்கிடையே உயிரிழந்த சதீஷ், முத்துபிரபாரகன் ஆகியோா் உடலை மீட்க வனத் துறையினா் சென்றபோது அவா்களையும் யானை துரத்தியுள்ளது. நீண்ட போராட்டத்துக்குப் பின் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

யானை தாக்கி உயிரிழந்த வனக் காவலா் சதீஷ் அண்மையில் பணிக்குச் சோ்ந்தது குறிப்பிடத்தக்கது. கணக்கெடுப்பின்போது யானையிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்த முன்னேற்பாடுகள், அதற்கான பயிற்சி அளிக்காததே யானையிடம் சிக்கிக் கொண்டதற்கான காரணம் என வனத் துறையின் ஒரு பிரிவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.