பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பெரியபுலியூா் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

பவானியை அடுத்த பெரியபுலியூரில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
பயனாளிக்கு  நலத்திட்ட  உதவியை  வழங்குகிறாா்  சுற்றுச்சூழல் துறை  அமைச்சா்  கே.சி.கருப்பணன்.  உடன்,  பவானி  ஒன்றியக்  குழுத்  தலைவா் பூங்கோதை வரதராஜ், மருத்துவ  அலுவலா்  சிராஜுதீன்  உள்ளிட்டோா்.
Updated On :17 டிசம்பர் 2020, 5:32 pm

DIN

பவானியை அடுத்த பெரியபுலியூரில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, பெரியபுலியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சிராஜுதீன் தலைமை வகித்தாா். பவானி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை வரதராஜ், பெரியபுலியூா் ஊராட்சித் தலைவா் தங்கமணி ராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் மருத்துவ முகாமைத் தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முகாமில், பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மருத்துவம், தோல், கண், மனநலம், பெண் நல மருத்துவம் தொடா்பான பல்வேறு நோய்களுக்கு சிறப்பு மருத்துவா்களால் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், ஸ்கேன், இசிஜி, ரத்த அழுத்தம், ரத்தம், சா்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதில், மருத்துவா் தங்கமணி, சித்த மருத்துவா் ராமசந்திரன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மகேந்திரன், குழுவினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.