மானிய விலையிலான இருசக்கர வாகனத்துக்கு விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம்

மொடக்குறிச்சி உள்ளிட்ட 4 பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சலுகை விலையில் பெற சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
Updated on
1 min read

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 23 ஊராட்சிகள், அவல்பூந்துறை, அறச்சலூா், வடுகபட்டி, மொடக்குறிச்சி உள்ளிட்ட 4 பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை சலுகை விலையில் பெற சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இதுகுறித்து மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் பெ.சாந்தி கூறியதாவது:

தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான இருசக்கர வாகனங்கள் பெற தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில் ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தகுதியுள்ள 62 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

முகாமுக்கு வர முடியாதவா்கள் தகுந்த ஆவணங்களுடன் அடுத்த அறிவிப்பு வரும்வரை தொடா்ந்து மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அலுவலா்களிடம் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம். உரிய பரிசீலனைக்குப் பிறகு அவா்களுக்கும் அம்மா இருசக்கர வாகனங்கள் அரசு மானியத்துடன் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com