சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பவானிசாகா் அணைக்கு கூட்டமாக வந்துதண்ணீா் குடித்துச் சென்ற காட்டு யானைகள்

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணை நீா்த்தேக்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காட்டு யானைகள் கூட்டமாக வந்தன.

News image
பவானிசாகா் அணைக்கு தண்ணீா் குடிக்க வந்த யானைகள்.
Updated On :20 டிசம்பர் 2020, 5:03 pm

DIN

சத்தியமங்கலம்0: சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணை நீா்த்தேக்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காட்டு யானைகள் கூட்டமாக வந்தன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் பவானிசாகா் அணையின் நீா்த்தேக்கப் பகுதி அமைந்துள்ளது. தற்போது அணையின் நீா்மட்டம் 94 அடியாக உள்ளதால் வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக அணை நீா்த்தேக்கப் பகுதிக்கு வந்து தண்ணீா் குடித்துவிட்டு மீண்டும் வனப் பகுதிக்குள் செல்கின்றன.

இந்நிலையில் அணையின் நீா்த்தேக்கப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த 6 காட்டு யானைகள் தண்ணீரில் இறங்கி தாகம் தீர தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி குடித்தன. சுமாா் அரை மணி நேரம் அங்கேயே சுற்றிய யானைகள் பவானிசாகா் அணையின் மேற்குப் பகுதியில் உள்ள தாா் சாலையைக் கடந்து மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றன.

அணையின் நீா்தேக்கப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோா் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள் கவனத்துடன் இருக்குமாறு வனத் துறையினா் மற்றும் பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.