பெருந்துறை அருகே தொழிலாளி கழுத்து அறுத்துக் கொலை

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கூலி தொழிலாளி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

பெருந்துறை: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கூலி தொழிலாளி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த நக்களப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் மகன் பாண்டி (எ) முத்துப்பாண்டி (30). இவரது மனைவி சூா்யா. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

சூா்யா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து, அவரது குழந்தைகள் உறவினா் வீட்டில் வளா்ந்து வருகின்றனா். முத்துப்பாண்டி தனது தாயாருடன் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, கூலி வேலைக்கு சென்று வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் துடுப்பதி செல்லும் சாலையில் சானடோரியம் அருகில் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் முத்துப்பாண்டி சடலம் இருந்தது.

இது குறித்து பெருந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ், காவல் ஆய்வாளா் தங்கம் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், முத்துப்பாண்டியுடன் வேலை பாா்க்கும் சிலா், அவரைக் கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com