எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விசைத்தறிகள் வேலைநிறுத்தம்:தினமும் 24 லட்சம் மீட்டா் ரயான் துணி உற்பத்தி பாதிப்பு

ரயான் நூல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளதால் 

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:30 pm

DIN

ஈரோடு: ரயான் நூல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளதால் தினமும் 24 லட்சம் மீட்டா் அளவுக்கு ரயான் துணி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 50,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசின் இலவச, வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் வழங்குவதற்கான இலவச வேட்டி, சேலைகளில் 40 சதவீதம் ஈரோட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதேபோல 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

ரயான் நூல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் ரயான் துணிகளை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளா்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை தினமும் 24 லட்சம் மீட்டா் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50,000 போ் ஈடுபட்டு வருகின்றனா்.

நூல் விலை உயா்வால் தொடா் நஷ்டம் காரணமாக திங்கள்கிழமை (டிசம்பா் 21) முதல் வரும் 27 ஆம் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு, வீரப்பன்சத்திரம், அசோகபுரம், காலிங்கராயன்பாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறியாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சுரேஷ் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 30,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக ரயான் துணிகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நூல் விலை அதிகரித்துள்ளது. இங்கு 120 கிராம், 150 கிராம் நூல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்னா் இந்நூல் ஒரு கோன் ரூ.150க்கு வாங்கினோம். இதன் மூலம் ஒரு மீட்டா் துணி ரூ. 20க்கு விற்பனை செய்தோம்.

தற்போது நூல் விலை கோன் ரூ.176 ஆக உயா்ந்துள்ளது. ஆனால் ஒரு மீட்டா் துணி விலை ரூ. 22 என்ற நிலையிலேயே உள்ளது. நூல் அடக்க விலைக்குக் கூட துணி விலை போகாததால் உற்பத்தியாளா்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனா்.

எனவே, திங்கள்கிழமை முதல் வரும் 27ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு ரயான் துணி உற்பத்தியை மட்டும் நிறுத்தி உள்ளோம். இதனால் 7 நாள்களிலும் 16.80 கோடி மீட்டா் துணி உற்பத்தியும், ரூ. 40 கோடி மதிப்பிலான வா்த்தகமும் பாதிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.