இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சித்தோடு அருகே கார் மோதியதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் பலி

சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் இறந்தார்.

News image
அனிதா (40).
Updated On :21 டிசம்பர் 2020, 8:47 am

DIN

சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் இறந்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி பிரிவில் பணிபுரிந்தவர் அனிதா (40). தனது கணவர் சதீஷ்குமார் மற்றும் மகனுடன் ஈரோடு சம்பத் நகரில் வசித்து வரும் இவர் பவானியில் உள்ள அலுவலகத்திற்கு நாள்தோறும் இருசக்கர வாகனத்தில் வந்து செல்வது வழக்கம். 

இந்நிலையில் திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் நசியனூர் வழியாக சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். சித்தோட்டை அடுத்துள்ள கங்காபுரம் அருகே சென்றபோது கோவையிலிருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அனிதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.