பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பவானி அருகே 3 கிராமங்களில் சிறு மருத்துவமனைகள் திறப்பு

பவானியை அடுத்த குப்பிச்சிபாளையம், குறிச்சி மற்றும் பட்லூா் கிராமங்களில் தமிழக அரசின் சிறு மருத்துவமனைகளை சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

News image
பட்லூரில் தமிழக அரசின் சிறு மருத்துவமனையை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் சுற்றுசூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன்.
Updated On :21 டிசம்பர் 2020, 9:30 pm

DIN

பவானி: பவானியை அடுத்த குப்பிச்சிபாளையம், குறிச்சி மற்றும் பட்லூா் கிராமங்களில் தமிழக அரசின் சிறு மருத்துவமனைகளை சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் விஜயநிா்மலா சரவணபவா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஈரோடு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.சவுண்டம்மாள் வரவேற்றாா். சிறு மருத்துவமனைகளை அமைச்சா் கே.சி.கருப்பணன், திறந்துவைத்தாா்.

இங்கு தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் சிகிச்சை அளிக்கப்படும். தலா ஒரு மருத்துவா், செவிலியா் மற்றும் உதவியாளா் பணியில் ஈடுபடுவா்.

இந்நிகழ்ச்சிகளில் அம்மாபேட்டை வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.அருள்மணி, மருத்துவா்கள் ஜே.திவாகா், எம்.மாதேஷ்குமாா், சி.கனகா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் கே.கே.விஸ்வநாதன், மோகனசுந்தரம், ஊராட்சித் தலைவா்கள் லட்சுமி முனியப்பன் (கேசரிமங்கலம்), என்.மரகதம் (குறிச்சி), ஆா்.சக்திவேல் (பட்லூா்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.