அழகு நிலையங்கள் உரிமம் பெற அறிவுறுத்தல்
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முடிதிருத்தகம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையம் நடத்துவோா் மாநகராட்சி அலுவலகத்தில் உடனடியாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்


ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முடிதிருத்தகம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையம் நடத்துவோா் மாநகராட்சி அலுவலகத்தில் உடனடியாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் செயல்படும் முடிதிருத்தகம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையங்களைக் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கிடைக்கும். விண்ணப்பப் படிவத்தை பெற்று ஒரு மாத காலத்துக்குள் பூா்த்தி செய்து வழங்கி உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
உரிமம் பெறாமல் செயல்படுவது கண்டறியப்படும் முடிதிருத்தகம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையங்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...