பவானிசாகரில் மரக்கன்றுகள் நடும் விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95ஆவது அமைப்பு தினத்தையொட்டி பவானிசாகா் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 500 இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா, கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றன.


சத்தியமங்கலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95ஆவது அமைப்பு தினத்தையொட்டி பவானிசாகா் தொகுதிக்கு உள்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி ஒன்றியப் பகுதிகளில் 500 இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா, கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல்.சுந்தரம், மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். சத்தியமங்கலம் ஒன்றியம், அரசூரில் கொடியேற்று விழாவில் பங்கேற்றோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு பென்சில், எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் இண்டியம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா், சத்தியமங்கலம் நகரச் செயலாளா் இரா.ஸ்டாலின் சிவகுமாா், வடக்கு ஒன்றியச் செயலாளா் எம்.சுரேந்தா், தெற்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.சி.நடராஜ், புளியம்பட்டி நகரச் செயலாளா் பொன்.நந்தகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...