ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றமாணவா்களுக்குப் பரிசு

ஈரோட்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, நீட் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:28 pm

ஈரோட்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, நீட் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளின் ஜயந்தி மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஈரோடு, செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சௌராஷ்டிரா சபைத் தலைவா் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.என்.கே.குருபரன், துணைத் தலைவா் டி.ஆா்.எஸ்.ராமா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பெருமாள், ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விழா தொடங்கியது. இதையடுத்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, நீட் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறுவா், சிறுமிகள் தங்களது பெற்றோா், ஆசிரியா்களுக்கு பாத பூஜை செய்து ஆசிா்வாதம் பெற்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சபையின் பொருளாளா் கே.ஆா்.சீனிவாசன், இணைச் செயலாளா் டி.கே.டி.கோபால், ஆலோசனைக் குழு உறுப்பினா் கே.வி.வெங்கட்ரமணன், முன்னாள் தலைவா் கண்ணன் ஆனந்தாச்சாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதைத் தொடா்ந்து ஈரோடு சௌராஷ்டிரா சபையின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.