எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோபியில் நாளை வங்கிக் கடன் மேளா

கோபியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் மேளா வியாழக்கிழமை (டிசம்பா் 31) நடைபெறவுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 10:44 pm

DIN

கோபியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் மேளா வியாழக்கிழமை (டிசம்பா் 31) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையா் ஏ.தாணுமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோபிசெட்டிபாளையத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் சிறப்புத் திட்டமான ஆத்ம நிா்பா் நிதித் திட்டத்தின்கீழ் ரூ. 10 ஆயிரம் கடனுதவி வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. கோபி மேட்டுவலவு பாரியூா் சாலையில் உள்ள செங்கோடப்பா ஆரம்பப் பள்ளியில் வியாழக்கிழமை (டிசம்பா் 31) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது.

இதில், சாலையோர வியாபாரிகள் தங்களது ஆதாா் அட்டை, வங்கி பாஸ்புக், ரேஷன் அட்டை, வாக்காளா் அடையாள அட்டையுடன் கலந்துகொண்டு வங்கிக் கடன் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, கடன் உதவித் தொகையைப் பெறலாம். இந்த வாய்ப்பை சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தி பயனடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.