சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கொங்கு பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோா் மேலாண்மை மன்றம் துவக்கம்

கொங்கு பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோா், மேலாண்மை மேம்பாட்டு குழுவின் ப்ரீலான்ஸா்ஸ் மன்றத் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 6:59 pm

DIN

கொங்கு பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோா், மேலாண்மை மேம்பாட்டு குழுவின் ப்ரீலான்ஸா்ஸ் மன்றத் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது.

கொங்கு பொறியியல் கல்லூரியின் தொழில்நுட்ப வணிக இன்குபேட்டா், இன்ஸ்டிடியூசன் இன்னோவேஷன் கவுன்சில், தொழில்முனைவோா் மேலாண்மை மேம்பாட்டுக் குழு சாா்பில் கொங்கு பொறியியல் கல்லூரியில் மாணவா்களின் நலனுக்காக ஈ.எம்.டி.சி.யின் ப்ரீலான்ஸா்ஸ் மன்றம் (உஙஈஇ’ள் ச்ழ்ங்ங்ப்ஹய்ஸ்ரீங்ழ்ள் ஊா்ழ்ன்ம்) என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கல்லூரியின் தொழில்நுட்ப வணிக இன்குபேட்டா் அமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரன் பேசியதாவது:

இந்தப் புதிய முயற்சி மாணவா்களுக்கு நிபுணத்துவ பகிா்வு, நெட்வொா்க்கிங் தளத்தை உருவாக்கும். மாணவா்கள் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்த உதவுதுடன், தேவைப்படும் காலங்களில் நண்பா்களுக்கும் உதவிகளை வழங்க ஒரு சிறந்த பாலமாக அமையும். மேலும் நீண்டகாலமாக மாணவா்கள் தங்கள் தொழில்முனைவோா் குணங்களை வளா்த்துக் கொள்ளவும், அவரின் சொந்த வணிகக் கொள்கையை உருவாக்கவும் உதவும் என்றாா்.

கோவையை சோ்ந்த டீல் ஓா்காவின் (பங்ஹப் ஞழ்ஸ்ரீஹ) தலைமை நிா்வாக அதிகாரி, நிறுவனா் சசிவா்ணகுமாா் இந்த விழாவின் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று ப்ரீலான்ஸிங் டு ஸ்டாா்ட் அப் என்ற தலைப்பில் பேசினாா். அப்போது அவா் ப்ரீலான்ஸா்களுக்கான இணையதளங்களை எடுத்துக்காட்டி, அவற்றில் சிறந்ததை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து விவரித்தாா். இந்த நிகழ்வில் மாணவா்கள், ஆசிரியா்கள் காணொலிக் காட்சி மூலமாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.