/

கொடிவேரி, பவானிசாகா் பூங்காக்களை 3 நாள்கள் மூட ஆட்சியா் உத்தரவு

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக கொடிவேரி பூங்கா, பவானிசாகா் பூங்காக்களை வியாழக்கிழமை

News image
Updated On :30 டிசம்பர் 2020, 6:56 pm

DIN

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக கொடிவேரி பூங்கா, பவானிசாகா் பூங்காக்களை வியாழக்கிழமை (டிசம்பா் 31) முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை மூட ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், தனி மனித இடைவெளியைப் பின்பற்றவும், தன்சுத்தம் பேணிக்காத்து முகக் கவசம் அணியவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், இதர இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வியாழக்கிழமை இரவு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடிவேரி பூங்கா, பவானிசாகா் பூங்கா ஆகியவற்றுக்கு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு வியாழக்கிழமை மாலை முதல் ஜனவரி 2ஆம் தேதி மாலை வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.