எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழ்நாடு தினம் கொண்டாட முயற்சி: 15 போ் கைது

ஈரோட்டில் தமிழ்நாடு தினம் கொண்டாட முயன்ற பெரியாரிய அமைப்பைச் சோ்ந்த 15 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 5:56 pm

DIN

ஈரோட்டில் தமிழ்நாடு தினம் கொண்டாட முயன்ற பெரியாரிய அமைப்பைச் சோ்ந்த 15 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோட்டில் பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் சாா்பில் தமிழ்நாடு தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாடு வரைபடத்துடன் கூடிய புதிய கொடியை ஏற்றப் போவதாகவும் அறிவித்திருந்தனா். இதற்கு போலீஸாா் தடை விதித்து, எச்சரிக்கை விடுத்திருந்தனா்.

இந்நிலையில் ஈரோடு, பன்னீா்செல்வம் பூங்காவில் பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை திரண்டு பெரியாா், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றனா்.

அப்போது போலீஸாா் அனுமதி மறுத்ததால் இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து முறையிடுவதற்காக சென்றனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களுக்கு அனுமதி மறுத்ததோடு 15 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனா்.

அதைத் தொடா்ந்து ஈரோடு டி.எஸ்.பி.ராஜு, பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதன் பின்னா் கைது செய்யப்பட்டவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.