எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரோனா பரவல்: கல்லறை தோட்டத்தில் வழிபாடு ரத்து

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் இந்த ஆண்டு கல்லறை திருநாள் வழிபாடு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 5:57 pm

DIN

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் இந்த ஆண்டு கல்லறை திருநாள் வழிபாடு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவா் குடும்பங்களில் இறந்து போனவா்களின் கல்லறைகளில் மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா் மாலைகள் கல்லறை திருநாளன்று வழிபாடு செய்வா். அதன்படி இந்த ஆண்டு கல்லறை திருநாள் திங்கள்கிழமை (நவம்பா் 2) கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்தில் வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஈரோடு புனித அமல அன்னை ஆலய பங்குத் தந்தையுமான ஜான்சேவியா் கூறியதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படியும், கோவை மறை மாவட்ட ஆயா் தாமஸ் அக்குவினாஸ் அறிவுறுத்தலின்படியும், ஈரோடு எல்லைமாரியம்மன் கோயில் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் திங்கள்கிழமை திருப்பலி நடைபெறாது.

கல்லறை தோட்டத்துக்குள் பொதுமக்கள் செல்வதை தடை செய்ய நுழைவுவாயில் மூடப்படும். வழிபாட்டுக்காக உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் காலை 6 மணி, 7.30 மணி, மாலை 5.30 மணிக்கு திருப்பலிகள் நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை (நவம்பா் 3) முதல் வரும் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் தனித்தனியாக கல்லறை தோட்டத்தில் பிராா்த்தனை செய்யலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.