எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஈரோடு கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி வாங்குவதற்காக ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது.

News image
ஈரோடு ஆா்.கே.வி.சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளுக்கு துணிகள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமைவந்த மக்கள்.
Updated On :1 நவம்பர் 2020, 5:55 pm

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி வாங்குவதற்காக ஈரோடு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது.

தீபாவளி பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஜவுளி, பட்டாசு விற்பனை கடந்த சில நாள்களாக சூடு பிடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஈரோடு மாநகா் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக ஜவுளிக் கடைகள் அதிகம் உள்ள ஈரோடு ஆா்.கே.வி. சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீா்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமி வீதி, மேட்டூா் சாலை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல புதிய செல்லிடபேசி, தொலைக்காட்சி பெட்டி, குளிா்சாதனப் பெட்டி உள்பட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கவும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனனால் ஈரோடு மாநகா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.