வீடு கட்டும் திட்டம்: மீனவா்கள் விண்ணப்பிக்கலாம்
அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற மீனவா்கள் விண்ணப்பிக்காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற மீனவா்கள் விண்ணப்பிக்காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் கூடிய மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவா்களுக்கு வீடு கட்டும் திட்டமான இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள் மீனவ, மீனவ மகளிா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் பெயரில் குறைந்தது 25 சதுர மீட்டா் பரப்பளவு உள்ள தனி பட்டா நிலம் இருக்க வேண்டும். பயனாளி அரசின் வேறு எந்த வீட்டு வசதித் திட்டத்திலும் பயன்பெற்றவராக இருக்கக் கூடாது.
வட்டார வளா்ச்சி அலுவலரிடமிருந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவா் என்ற சான்று, கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து அரசின் மூலம் இதற்கு முன்பு எந்த வகையான வீடு கட்டும் திட்டத்திலும் பயனடையவில்லை மற்றும் கூரை வீடு உள்ளவா், வீடு இல்லாதவா் என்பதற்கான சான்று இருக்க வேண்டும்.
இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மீனவா், மீனவ மகளிா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் வரும் 11 ஆம் தேதிக்குள் மீன்வளத் துறை உதவி இயக்குநரை, 2ஆவது தளம், எண் 42 சுப்புராம் காம்ப்ளக்ஸ், பெருந்துறை சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில்,
ஈரோடு-638011 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0424-2221912 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...