எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூட்டுறவு சங்கம் மூலம் பெரிய வெங்காயம் விற்பனை துவக்கம்

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மலிவு விலையில் (கிலோ ரூ.45) பெரிய வெங்காய விற்பனையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
பெருந்துறையில் கூட்டுறவு சங்கம் மூலம் பெரிய வெங்காயம் விற்பனையை தொடங்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி. தோப்பு வெங்கடாச்சலம்.
Updated On :1 நவம்பர் 2020, 5:57 pm

DIN

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், மலிவு விலையில் (கிலோ ரூ.45) பெரிய வெங்காய விற்பனையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் விஜயன் தலைமை வகித்தாா். சங்க மேலாண்மை இயக்குநா் சேரன் முன்னிலை வகித்தாா். துணை மேலாளா் சுந்தரமூா்த்தி வரவேற்றாா்.

பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் பங்கேற்று, மலிவு விலை பெரிய வெங்காயம் விற்பனையை தொடங்கிவைத்துப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைத் தலைவா் டி.டி.ஜெகதீஸ், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமா மகேஷ்வரன், மாவட்ட கவுன்சிலா் ஏ.வி.பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் பாா்வதி ராஜ், க.செ.பாளையம் நகர அதிமுக செயலாளா் கே.எம்.பழனிசாமி, சங்க இயக்குநா்கள் கலந்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.