எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சத்தியமங்கலத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி

சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டுபாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியானார்.

News image
மெளனிகா (வயது 6)
Updated On :3 நவம்பர் 2020, 3:30 pm

DIN

சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டுபாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியானார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டுபாளையத்தை சேர்ந்த சத்யா, எரங்காட்டுப்பாளையம் ஊராட்சியல் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் மெளனிகா (வயது 6). 

எரங்காட்டுபாளையத்தில் 2 ம் வகுப்பு படித்து வந்தார். மெளனிகா தனது பக்கத்துவீட்டு தோழிகள் பூவிழி, நிஷாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆறுமுகம் என்பவரின் வீட்டு சுவர் மழையில் பாதிக்கப்பட்டு விழும் நிலையில் இருந்தது. மெளனிகா சுவரை பிடித்தவாறு சென்றபோது சுவர் இடிந்து மெளனிகா மீது விழுந்தது.

அப்போது பூவிழி, நிஷா சப்தம் போட்டதால் பக்கத்து வீட்டு மல்லிகை என்பவர் கட்டச்சுவர்களிடையே சிக்கிக்கொண்ட மெளனிகாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த மோனிஷா சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.