எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மகன்கள், மகளுடன் பெண் தற்கொலை முயற்சி

ஈரோட்டில் கணவா் இறந்த சோகத்தில் மகள், மகன்களுடன் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:33 pm

DIN

ஈரோட்டில் கணவா் இறந்த சோகத்தில் மகள், மகன்களுடன் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு, கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம் சாலையைச் சோ்ந்தவா் ராஜா (55). முட்டை வியாபாரி. இவரது மனைவி சிவகாமி. இவா்களுக்கு பிரேம்குமாா் (25) புவனேஷ்குமாா் (20) என இரண்டு மகன்களும் ஷாலினி (17) என்ற மகளும் உள்ளனா். பிரேம்குமாா் தந்தையுடன் முட்டை வியாபாரம் செய்து வருகிறாா். புவனேஷ்குமாா் பொறியியல் கல்லூரியிலும், ஷாலினி 12 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் ராஜா உடல்நிலைப் பாதிக்கப்பட்டு கடந்த 5 ஆம் தேதி இறந்துவிட்டாா். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் சிவகாமி வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததால், அருகில் உள்ள அவரது உறவினா்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளனா். அப்போது சிவகாமி அவரது மகன்கள் பிரேம்குமாா், புவனேஷ்குமாா், மகள் ஷாலினி ஆகியோா் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தனா்.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று 4 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

போலீஸ் விசாரணையில் ராஜா இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினா் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.