கோபியில் ரூ.7.30 லட்சத்துக்கு வாழைத் தாா்கள் ஏலம்
கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கு வாழைத் தாா் ஏலம் நடைபெற்றது.


கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கு வாழைத் தாா் ஏலம் நடைபெற்றது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழைத்தாா் ஏலத்தில், கதளி கிலோ ரூ. 44, பூவன் தாா் ஒன்று ரூ.400, ரொபஸ்டா ரூ.305, செவ்வாழை ரூ.630, மொந்தன் ரூ.300, ரஸ்தாளி ரூ.570 என விற்பனையானது. ஏல விற்பனைக்கு மொத்தம் 7,653 தாா்கள் கொண்டு வரப்பட்டன. மொத்தம் ரூ. 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.
தேங்காய் ஏல விற்பனையில் குறைந்தபட்சமாக ஒரு தேங்காய் ரூ.10க்கும் அதிகபட்சமாக ரூ.28.90க்கும் விற்பனையானது. ஏலத்துக்கு 4, 033 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. மொத்தம் ரூ.82 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...