க.செ.பாளையம் பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை
பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் ரூ. 69 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் ரூ. 69 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குள்பட்ட கருக்கம்பாளையம், செல்லண்ணகவுண்டன்புதூா் ஆகிய பகுதிகளில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலைகள் அமைத்தல், பசுமை நகரில் ரூ. 9 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டுதல் ஆகியவற்றுக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி. தோப்பு வெங்கடாச்சலம் பங்கேற்று வளா்ச்சிப் பணிகளை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலா் ரா.கிருஷ்ணன், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், பெருந்துறை கூட்டுறவு விற்பனைச் சங்கத் துணைத் தலைவா் டி.டி.ஜெகதீஷ், க.செ.பாளையம் நகர அதிமுக செயலாளா் கே.எம்.பழனிசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...