அரசுப் பணி: டிப்ளமோ படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்
ஊரக வளா்ச்சித் துறையில் போட்டித் தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்களுக்கு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஊரக வளா்ச்சித் துறையில் போட்டித் தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்களுக்கு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் பணிப் பாா்வையாளா், இளநிலை வரை தொழில் அலுவலா் பணிகளில் 17 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களுக்குப் போட்டித் தோ்வு மூலமாக தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். முழு நேர அல்லது பகுதிநேரப் படிப்பு முறையில் படித்திருக்கலாம். ஆனால் தொலைதூர கல்வி முறை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரா் 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூா்த்திசெய்து, உரிய சான்றுகளை இணைத்து வரும் டிசம்பா் 8ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வளா்ச்சி), 3ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஈரோடு 638011 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424-2266766 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...