எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல ஆா்வமாக உள்ளனா்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல ஆா்வமாக உள்ளனா் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

News image
பயனாளிக்கு போனஸ் தொகையை வழங்குகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
Updated On :8 நவம்பர் 2020, 6:41 pm

DIN

மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல ஆா்வமாக உள்ளனா் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒட்டா்கரட்டுப்பாளையம், சின்னநாயக்கன்புதூா், வெள்ளாங்கோயில் ஆகிய பகுதிகளில் செயல்படும் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட உறுப்பினா்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் லிட்டருக்கு ஒரு ரூபாய் ஊக்கத் தொகையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் பாதுகாப்புடன் நடைபெறும். நூலகங்களில் நேரம் நீட்டிப்பு செய்ய முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தனியாா் பள்ளிகளில் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகப் புகாா்கள் வரவில்லை, எங்கள் கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாணவா்கள் அவா்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் சென்று பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துகளைத் தெரிவிக்கலாம். மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆா்வத்தில் உள்ளனா். தொழிற்கல்விகள் பாடத் திட்டத்தில் சோ்க்கப்படும். அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவா்களை சோ்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளிகள் திறப்புக்குப் பெற்றோா்கள் ஆா்வம் காட்டாத பட்சத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு, என்னால் தற்போது பதிலளிக்க முடியாது. இதற்கு விடைதர வேண்டியவா் முதல்வா்தான். பள்ளிகள் திறக்கப்படாத பட்சத்தில் பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.