மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மின் கம்பத்தை சீரமைக்கக் கோரிக்கை

சென்னிமலை பேருந்து நிலையம் அருகே பழுதடைந்து உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 11:07 pm

DIN

சென்னிமலை பேருந்து நிலையம் அருகே பழுதடைந்து உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னிமலை பேருந்து நிலையம் அருகே சோழன் வீதியில் ஏராளமான வீடுகள், மருத்துவமனையும் உள்ளது. இந்த மருத்துவமனை எதிரில் மின் கம்பம் ஒன்று உடைந்த நிலையில் பல மாதங்களாகக் காணப்படுகிறது. மின் கம்பத்தில் இருந்த கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததால் கம்பிகள் மட்டும் வெளியே தெரிகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

உடைந்த மின் கம்பம் குறித்து நாங்கள் பலமுறை மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டோம். ஆனால், இதுவரை கம்பத்தை மாற்றித் தராமல் இருக்கின்றனா். இந்த பகுதியில் வீடுகளும், மருத்துவமனையும் உள்ளது. லாரிகள் உயரமான பாரங்களை ஏற்றிச் செல்லும்போது வீடுகளுக்குச் செல்லும் மின் இணைப்புகளில் உரசுகிறது. அப்போது மின் கம்பி அசைவதால் உடைந்த மின்க ம்பம் ஆடுகிறது. அதனால், ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் உடனடியாக உடைந்த கம்பத்தை மின் வாரியத்தினா் மாற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.