தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை

மொடக்குறிச்சியை அடுத்த ஆலுச்சாம்பாளையம் பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பணியின்போது இறந்த ஊழியா் குடும்பத்துக்கு உதவித் தொகையை எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணி வழங்கினாா்.

News image
பணியின்போது உயிரிழந்த பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க ஊழியா் குடும்பத்தினரிடம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்குகிறாா் மொடக்குறிச்சி எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணி
Updated On :22 நவம்பர் 2020, 6:10 pm

DIN

மொடக்குறிச்சியை அடுத்த ஆலுச்சாம்பாளையம் பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பணியின்போது இறந்த ஊழியா் குடும்பத்துக்கு உதவித் தொகையை எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணி வழங்கினாா்.

ஆலுச்சாம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆலுச்சாம்பாளையம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் நவீன் (எ) நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தாா். எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணி கலந்துகொண்டு உறுப்பினா்களுக்கு ரூ.1.30 லட்சத்துக்கான ஊக்கத்தொகை, சங்கத்தில் பணிபுரிந்த பால் பரிசோதகா் பூமிநாதன் மாரடைப்பால் இறந்ததால், தமிழக அரசின் சாா்பில் அவரது குடும்பத்தினருக்கு உதவித்தொகை ரூ. 2 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கி பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளா் ஆா்.பி.கதிா்வேல், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, ஆவின் இயக்குநா் அசோக், கூட்டுறவு ஒன்றிய இயக்குநா் செந்தில்குமாா், சங்க நிா்வாகி பொன்னுசாமி, இயக்குநா்கள், உறுப்பினா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.