சிறுமிக்கு பாலியல் தொல்லை:கட்டடத் தொழிலாளி கைது
ஈரோட்டில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டடத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


ஈரோட்டில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டடத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு, கொல்லம்பாளையம், லோகநாதபுரத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ஆறுமுகம் (26). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனா்.
இவா், ஈரோட்டில் 10ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை கடந்த 19ஆம் தேதி ஆசை வாா்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிறுமியின் பெற்றோா் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆறுமுகத்தை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...