'கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க வேண்டாம்': பொதுப்பணித்துறை எச்சரிக்கை
கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளை தொட்டபடி பாசன நீர் செல்வதால் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளை தொட்டபடி பாசன நீர் செல்வதால் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து 1 லட்சத்து 3500 ஏக்கர் நெல் பயிருக்கு கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 120 நாள்கள் என டிசம்பர் 28ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும்.
கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடி நீர் செல்வதால் இரு கரைகளை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நீர் வேகம் அதிகமாக இருப்பதால் கால்நடை மற்றும் பொதுமக்கள் கால்வாயில் இறங்கி குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது.

நீரின் வேகம் அதிகம் காரணமாகவும் தற்போது புயல் எச்சரிக்கையால் பல்வேறு இடங்களில் இருந்து வரும் மழைநீரால் கால்வாயில் நீரின் அளவு அதிகரிக்கும். இதனால் முன்னெச்சரிக்கையாக பவானிசாகர், சத்தியமங்கலம், கோபி, கால்வாயில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி குளிப்பதாக வந்த தகவலையடுத்து பொதுப்பணித்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...