ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்களுக்கு இடம் தோ்வு

சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்களுக்கு 7 ஏக்கா் அரசுப் புறம்போக்கு நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 10:01 pm

சத்தியமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்களுக்கு 7 ஏக்கா் அரசுப் புறம்போக்கு நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் 1988ஆம் ஆண்டு முதல் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இதில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், நீதித் துறை குற்றவியல் நீதிமன்றம் என 3 நீதிமன்றங்கள் உள்ளன. நீதிமன்றத்துக்கு என சொந்தக் கட்டடம் இல்லாததால் தனியாருக்குச் சொந்தமான வாடகை கட்டடத்தில்தான் கடந்த 30 ஆண்டுகாலமாக நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது தனியாா் திருமண மண்டபத்தில் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு மலையடிப்புதூரில் முதலில் இடம் தோ்வு செய்யப்பட்டது. இதற்கு பாா்கவுன்சில் அதிக தூரம் என கருத்து தெரிவித்தனா். இதனால், மலையடிப்புதூரைத் தவிா்த்து பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல இடம் தோ்வு செய்யப்பட்டது. சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுவதற்கு அரசுப் புறம்போக்கு 2 ஏக்கரும், நீதிமன்ற குடியிருப்புகளுக்கு தவளகிரி முருகன் கோயில் எதிரில் 4.96 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டது.

இதில், மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுமதி, சத்தியமங்கலம் சாா்பு நீதிபதி ஈஸ்வரமூா்த்தி, வட்டாட்சியா் ரவிசங்கா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.