பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சத்தி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

சத்தி அருகே சிறுமுகை அடுத்த பெதிகுட்டை பகுதியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் காரில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

News image
விபத்துக்குள்ளான கார்
Updated On :4 அக்டோபர் 2020, 12:16 am

DIN

மேட்டுப்பாளையம்: சத்தி அருகே சிறுமுகை அடுத்த பெதிகுட்டை பகுதியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் காரில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் துரை மகன் ராஜன் (46), நவீன்குமார் (46), அரவிந்தன் (45), காரமடை அருகே பிளிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (47) இவர்கள் 4 பேரும் சத்தியில் இருந்து சிறுமுகை நோக்கி காரில் சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனர். அப்போது பெத்திக்குட்டை அருகே வந்தபோது சிறுமுகையில் இருந்து சத்தி நோக்கி சென்ற காரில் நேருக்கு நேர் மோதினர்.

இதில் சிறுமுகையில் இருந்து சக்தி நோக்கி வந்த காரில் கோவை வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் கௌசில், சிறுமுகை பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் பென்ஜில், இதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் தேவன்ந்த் ஆகியோர் இருந்தனர். விபத்தில் சத்தியிலிருந்து சிறுமுகை நோக்கி காரில் வந்த ராஜன், நவீன்குமார், அரவிந்தன், மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே காரில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Story image

இதுகுறித்து தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி கார்த்திக்விஜய், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சிறுமுகை காவல் ஆய்வாளர் இளங்கோ மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிறுமுகையில் இருந்து சத்தி நோக்கி காரில் சென்ற கௌசில், பென்ஜில், தேவன்ந்த் ஆகியோர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இதுகுறித்து சிறுமுகை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.