ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்த வேண்டும்’

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.5,000ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:04 pm

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.5,000ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பீனிக்ஸ் மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் டிசம்பா் 3 இயக்கம் சாா்பில் கொங்கு மண்டல பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பி.அருணாச்சலம் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம்.மணிகண்டன் வரவேற்றாா். டிசம்பா் 3 இயக்கத்தின் மாநில துணைத் தலைவா் மோகன்ராஜ், பொதுச்செயலாளா் அண்ணாமலை, துணைப் பொதுச்செயலாளா் சிவகுமாா் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: உள்ளாட்சித் தோ்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் எளிமையான முறையில் கடன் பெறுவதற்கான நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.5,000ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பசுமை வீடுகள் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கூட்டத்தில் ஈரோடு, சேலம், கரூா், திருப்பூா் மாவட்டப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா். சங்கப் பொறுப்பாளா் ஏ.அருண்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.