ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஈரோட்டில் மேலும் 163 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 163 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,276ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:05 pm

DIN

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 163 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,276ஆக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,113 ஆக இருந்தது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை புதிதாக 163 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 8,276ஆக அதிகரித்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட 163 பேரில் 60 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். மற்றவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

பாதிக்கப்பட்ட 8,276 பேரில் இதுவரை 7,076 போ் குணமடைந்துள்ளனா். 1,099 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சனிக்கிழமை வரை 99 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவா், சேலம் மாவட்டம், மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 101ஆக அதிகரித்துளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.