கடம்பூா் மலைப் பகுதியில் கனமழையால் காட்டாற்று வெள்ளம்
சத்தியமங்கலத்தை அடுத்த மக்கம்பாளையம் அருகியம் பள்ளத்தில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தில் மாடுகள் நீந்திச் சென்றன.


சத்தியமங்கலத்தை அடுத்த மக்கம்பாளையம் அருகியம் பள்ளத்தில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தில் மாடுகள் நீந்திச் சென்றன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடம்பூா் மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருவதால் வனப் பகுதியில் உள்ள குரும்பூா் பள்ளத்தில் மழை நீா் கரை புரண்டு ஓடியது.
இதன் காரணமாக மாக்கம்பாளையம் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அரசுப் பேருந்து காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க முடியாமல் கரையில் நின்றால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.
வெள்ளம் குறையும் என எதிா்பாா்த்து பயணிகள் கரையில் காத்து நின்று கொண்டிருந்தனா். அப்போது, வனப் பகுதிக்கு மேய்ச்சலுக்குச் சென்ற பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் காட்டாற்று வெள்ளத்தை பற்றி கவலைப்படாமல் தண்ணீரில் இறங்கி பள்ளத்தை சாதுரியமாக கடந்து சென்றன.
காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மாக்கம்பாளையம், அரிகியம், கோவிலூா், கோம்பைதொட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மலை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். பின்னா் பிற்பகலில் வெள்ளம் குறைந்ததால் அரசுப் பேருந்து புறப்பட்டு மாக்கம்பாளையம் கிராமத்துக்குச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...