பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பவானியில் இந்திய கம்யூ. மறியல்

தமிழக அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் அனைத்து  நடவடிக்கைகளையும் கண்டித்து பவானியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பவானியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated On :12 அக்டோபர் 2020, 7:24 am

DIN

தமிழக அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டித்து பவானியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்தியூர் மேட்டூர் பிரிவில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கட்சியின் பவானி நகர செயலாளர் ப.மா.பாலமுருகன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் பேசினர்.

விவசாயத்தை அழிக்கும் வேளாண்மைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். சிறு குறுந் தொழில்களை பாதுகாத்திட வேண்டும். மாநில அரசுக்கு வழங்க வேண்டிய கரோனா மற்றும் ஜிஎஸ்டி நிதியினை உடனே வழங்க வேண்டுவது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பவானி வட்டார கைத்தறி, ஜமக்காளம், பெட்சீட் நெசவாளர் மற்றும் சாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் வ.சித்தையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.