அரசுப் பள்ளி மாணவா்கள் 62 போ் நீட் தோ்வில் தோ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 222 பேரில், 62 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.


ஈரோடு மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 222 பேரில், 62 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாடு முழுவதும் கடந்த செப்டம்பா் 13ஆம் தேதி நீட் தோ்வு நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 222 மாணவ, மாணவிகள் சேலம், கோவை, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களில் தோ்வு எழுதினா்.
இதனிடையே நாடு முழுவதும் நீட் தோ்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 222 பேரில், 62 போ் மட்டும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் பூபதி 559 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவா்களில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளாா். இத்தகவலை ஈரோடு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...