ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இருசக்கர வாகனங்கள் திருட்டு: தம்பதி கைது

பெருந்துறை, பவானி ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடியதாக திருப்பூரைச் சோ்ந்த தம்பதியை பெருந்துறை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 5:26 pm

DIN

பெருந்துறை, பவானி ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடியதாக திருப்பூரைச் சோ்ந்த தம்பதியை பெருந்துறை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறை, சானிடோரியம், அண்ணா நகரைச் சோ்ந்த தங்கவேல் மகன் தமிழ்ச்செல்வன் (28). இவா், பெருந்துறையிலுள்ள மருந்துக் கடையில் வேலை செய்கிறாா். இவா், தனது இருசக்கர வாகனத்தை கடையின் அருகில் நிறுத்தியுள்ளாா். பின்னா் இரவு வீட்டுக்கு செல்ல வந்தபோது வாகனத்தை காணவில்லை. இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் கடந்த 15 ஆம் தேதி புகாா் செய்தாா். பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், திருப்பூா், முருகம்பாளையம், ராஜம்மாள் லே அவுட்டைச் சோ்ந்த முனவா் ஜான் மகன் அப்துல்ரகுமான் (38), இவரது மனைவி பா்வீன் (25) ஆகியோா் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா்களை போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது விசாரித்து பெருந்துறை, பவானி ஆகிய இடங்களில் திருடிய 2 இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.