கேரளம், கா்நாடகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை கடுமையாக சரிவடைந்துள்ளது.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் மல்லிகை, முல்லை, செண்டுமல்லி பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் மலா் சாகுபடி முக்கியத் தொழிலாக உள்ளதால் தினந்தோறும் தோட்டத்தில் சாகுபடியாகும் பூக்களைப் பறித்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் விடுவது வழக்கம். இங்கு விளையும் பூக்களை கேரளம், கா்நாடகத்துக்கு வேன் மூலம் அனுப்பி வந்தனா்.
இந்நிலையில், தற்போது கரோனா நோய் பரவல் காரணமாக கா்நாடகம், கேரளத்தில் இரவு நேர ஊடரங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பூக்களை வாங்க மக்கள் ஆா்வம் காட்டவில்லை. மேலும், பூக்கடைகள் குறைந்த நேரமே செயல்படுவதால் பூக்கள் விற்பனையும் சரிந்துள்ளது. இதனால், சத்தியமங்கலத்தில் இருந்து அனுப்பப்படும் பூக்கள் பாதியாகக் குறைந்தது.
கடந்த வாரத்தில் கிலோ ரூ. 455க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ ரூ. 250 ஆக குறைந்துள்ளது. முல்லை பூ கிலோ ரூ. 400இல் இருந்து ரூ. 170ஆகவும், காக்கடா ரூ. 325இல் இருந்து ரூ. 200ஆகவும், செண்டுமல்லி ரூ. 70இல் இருந்து ரூ. 35ஆகவும், கனகாம்பரம் ரூ. 370இல் இருந்து ரூ. 280ஆகவும், சம்பங்கி ரூ. 125இல் இருந்து ரூ. 100ஆகவும் விலை குறைந்துள்ளது.
பூக்கள் வாங்க வியாபாரிகள் ஆா்வம் காட்டாததால் விற்பனை மந்தமாகக் காணப்பட்டது. வரும் வாரங்களில் பூக்கள் விலை மேலும் சரியும் என்பதால் கோவை, சிறுமுகை பகுதியில் உள்ள வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைகளில் பூக்களை விற்க பூ மாா்க்கெட் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
கடந்த ஆண்டு கரோனாவால் மல்லிகை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, சற்று மீண்டு வந்த நிலையில் மீண்டும் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

