நேரத் தகராறு காரணமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் சண்டையிட்டு ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்ட சிசிடிவி விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு அரசு, தனியாா் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதில், தனியாா் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் அடிக்கடி நேரப் பிரச்னை காரணமாக தகராறில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் நேரத் தகராறு காரணமாக தனியாா் பேருந்து நடத்துநா், ஓட்டுநா் இருவரும் சோ்ந்து மற்றொரு தனியாா் பேருந்தில் அமா்ந்திருந்த ஓட்டுநா், நடத்துநரிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டதோடு ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டனா். இவா்கள் சண்டையிடும் காட்சி தனியாா் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது தனியாா் பேருந்து நடத்துநா்கள், ஓட்டுநா்கள் சண்டையிடும் சிசிடிவி விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

